May 26, 2011

பாம்பாக மாறிவிடுங்கள்


நான் ( Tamil Orkut)ஆர்குட்டில் எழுதியவற்றை .நல்ல பொருள் கருதி ,கூறியது மீண்டும் கூறலும் குற்றம் ஆகாது என்பதால் மீள் பதிவு செய்கிறேன் அதற்கான முக்கியமான பின்னூட்டங்கள் செய்தவர்களின் கருத்துகளோடு.


பாம்பாக மாறிவிடுவோம்.

வனப்பகுதிகளில் இருபாம்புகள் ஒன்றை ஒன்று பின்னி பிணைந்து எழுந்து நின்று 1லிருந்து 5மணி நேரம் ஆடிக்கொண்டு இருப்பதை பார்த்து விட்டு கிராம மக்கள் பாம்புகள் இனபெருக்கத்திற்காக எவ்வளவு சிறப்பாக காதல் செய்கின்றன என்று வேடிக்கை பார்ப்பார்கள்.






உன்மையில் அவைகள் சல்லாபிக்கிற அல்லது காதல் கொள்ளும் காட்சியன்று அது.ஏரியாவை தக்க வைத்துக் கொள்ள சன்டையிடும் காட்சிதான். அவைகள் தங்களுக்கென்றுள்ள எழுதப் படாத சட்ட விதிகளின் படி சண்டையிடும் காட்சிதான் அது. அவைகளிடமுள்ள கொடிய விஷம் பற்றி அறிந்து வைத்துள்ளன. ஆகையால் ஒரு சட்டம் இயற்றிக்கொண்டுள்ளன.

நாம் ஒருவரை ஒருவர் விஷத்தால் தீண்டினால் இருவரும் இறக்க நேரிடும் ஆகவே பலப்பரிட்சை மட்டும் பார்த்துக் கொள்வோம். யாருடைய தலையை யார் கீழே அழுத்துகிறார்களோ அவர்களே வென்றவர்கள். மற்றவர் தோல்வியை ஒப்புக் கொண்டு இடத்தை காலி செய்து விட வேண்டும் என்பதுதான் அந்தச் சட்டம். பள்ளிக்கூடம் செல்லவில்லை,சட்டம் படிக்க வில்லை ஆனாலும் கடைப்பிடிக்கின்றன.

அதனால்தான் அவை சமயத்தில் ஒன்றின் தலையை ஒன்று தட்டும் முயற்சியில் ஐந்தடி உயரம் கூட எழுந்து நின்று ஐந்து மணிநேரம் கூட போராடுகின்றன்.
இவ்வாறு மூன்றறிவு கொண்ட உயிர்கள் தங்கள் வாழ்வாதார போட்டியின் போது கூட ஒருவரை ஒருவர் கடித்துக் கொள்ளாமல் சண்டையிடும் போது ஆறறிவு கொண்ட நாம் ஏன் பொழுது போக்கான விஷயத்திற்கு எடுத்தவுடன் விஷத்தைக் கக்க வேண்டும்.கருத்துக்களால் எழுந்து நின்று கடைசிவரை கண்ணியமாக வாதம் செய்வோம்.

நமக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுத்த கூகுளுக்கு நன்றி சொல்லி நமது வாதத் திறமையையும் எழுத்தாண்மையையும் பெருக்கிக் கொள்வோம்.

(குறிப்பு: பாம்பாக மாறி வாதிடுங்கள் ஆனால் ராஜநாகங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் ஏனெனில் அவைகளின் உணவே பாம்புதானாம்)

எங்க குழு உங்களுக்கு சப்போர்ட் பண்ணுது... முழுமனதுடன்..
நாட்டாமை தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம.
@Nattamai
A very good example sir !!!..
@நாட்டாமை
அருமையான உதாரணம் , விளக்கம், தகவல் மற்றும் அறிவுரை ! நன்றி நண்பர் நாட்டாமை
நமக்கு ஒரு மேடை அமைத்துக் கொடுத்த கூகுளுக்கு நன்றி சொல்லி நமது வாதத் திறமையையும் எழுத்தாண்மையையும் பெருக்கிக் கொள்வோம்.

(குறிப்பு: பாம்பாக மாறி வாதிடுங்கள் ஆனால் ராஜநாகங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் ஏனெனில் அவைகளின் உணவே பாம்புதானாம்) //

அருமை திரு ., நாட்டாமை அவர்களே.,

சிறந்த எடுத்துக்காட்டுகள்,.

ஆமோதிக்கிறோம்., தங்களை., தங்கள் கருத்துக்களை,.
அருமையான கருத்து சார், எனக்கு ஒரு டவுட், 3 அறிவு, 2 அறிவு னு விலங்குகளுக்கு சொல்றோம் இல்லையா? அது எத வச்சி தீர்மானிக்கிறோம்? விளக்குங்களேன் மற்றும் 6 அறிவு பகுத்தறிவு, அத தவிர, மத்த 5 அறிவுகள் என்ன என்ன? விலங்குகளை எப்படி 1-2-3-4-5 னு வகை படுத்துறோம்.
சுருக்கமாக சொன்னால்
1)மரம் செடி கொடி
2)புழு,பூச்சிகள்,
3)ஊர்வன
4)பறப்பன
5)நடப்பன
6)யோசிப்பவை

Rajkumar

நன்றி நண்பர்களே...

@ நாட்டாமை..
அருமை....நான் பக்கம் பக்கமாக போட்டு சொல்ல வந்ததை நீங்கள் ரத்தினச் சுருக்கமாக அனைவரும் புரிந்து கொள்ளும் படி சொண்ணீர்... அருமை அருமை.
நன்றி @ராஜ்குமார், நாட்டமை சார்.

jayanthi

நன்றி நாட்டாமை அவர்களே.

எனக்குக் கூட இன்று ஒரு பதிவைப் படித்தபின் பேசாமல் இந்தத் தளத்திற்கு வராமல் இருந்து விடலாமா என்று தோன்றியது. எல்லா இடத்திலும் நன்மக்களும் தீயவர்களும் கலந்துதான் இருக்கிறார்கள். நாம் அன்னப்பறவையாக இருப்போம்.

mahalingam.s

நன்றி நாட்டாமை ,ராஜ் வழக்கம் போல் கலக்கி விட்டர்கள்

Feb 10, 2011

நீயா நானா

வர வர இந்த கோபிக்கு புத்தி கெட்டுபோச்சு. தலைப்பும் மேட்ட்ரும் தீர்ந்து போச்சா?. திருமணத்திற்குபின் பெற்றோரின் தலையீடு சரியா தவறா என்று ஒரு தலைப்பு. சமூகத்தில் அனுபவம் மிக்க பெற்றோரின் புத்திமதியை தலையீடு என்று தலைப்பிட்டு ஒரு ஷோ. புத்திமதி சொன்னா தலையீடா? இந்த மாதிரி ஆளுகளால சமூகம் சீக்கிரம் கெட்டுப் போயிரும்.

அதில் நடுநாயகமாக இருக்கை கொடுத்து கருத்துச் சொல்ல நடுவர்களை உட்காரவைத்து இருந்தார். பல பெரிய மனுசனுங்க உட்கார்ந்து தங்கள் தரப்பு வாதங்களை சொல்லும் போது அதற்கு நடுவர்களாக பிரமிட் நடராஜனும், தீபக் என்றொரு டிவி நடிகரையும் உட்கார வைத்து இருக்கிரார். பிரமிட் நடராஜனைக் நடுவராக ஏற்றுக் கொள்ளலாம். வயதில் மூத்தவர் அனுபவப் பட்டவர். இந்த தீபக் எந்தவகையில் அந்த இடத்திற்கு தகுதியானவர். இது கலந்து கொண்ட மற்றவர்களை அசிங்கப்படுத்துவது போல் இருக்கிறது. ஒருவேளை தீபக்கை அசிங்கப்படுத்த கோபி செய்த முயற்சியா?

மொத்தத்தில் இந்தமாதிரி ஷோவெல்லாம் செல்லாது செல்லாது.